தாய்லாந்து நாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் சச்சின்.. அதுவும் எந்த வண்டில போறாருனு பாருங்க 😍
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் டெண்டுல்கர் தற்போது தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 100. Master Blaster என்ற பெயரில் இந்த சுற்றுலாவை சச்சின் மேற்கொண்டு வருகிறார்.
'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது பேட்டிங் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சச்சின், அவ்வப்போது சுற்றுலா, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் என பிஸியாக வலம் வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சச்சின் அங்கு மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பெனாலியம் கடற்கரையில் பாரம்பரிய முறையில் மீன்பிடித்த மீனவர்களை சந்தித்து பேசுவது போல அந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகியது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிங்க் சிட்டி’யான ஜெய்ப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பாரம்பரிய ராஜஸ்தானி காலை உணவு உண்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், சச்சின் தனது காலை உணவை உண்டு கொண்டே "ஜெய்ப்பூரில் இருக்கும்போது, ஜெய்ப்பூரில் பிறந்தவரை போல உங்கள் காலை உணவை உண்ண வேண்டும்" என்று பேசியதும் வைரலானது .
இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சச்சின் டெண்டுல்கர், சில நாட்களாக அங்குள்ள மக்களிடம் உரையாடுவது, கடற்கரையில் உணவருந்துவது, கடற்கரையில் சுற்றி திரிவதை வீடியோ & புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது கடற்கரையில் டிராக்டர் வண்டியில் பயணம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பின்னர் படகில் பயணம் செய்யும் வீடியோவையும் சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
