சச்சினுக்கே TOUGH கொடுக்கும் அஸ்வின்.. அடுத்த சாதனைக்கு அஸ்திவாரம்.. பெரும் எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை நெருங்கி இருக்கிறார். இதனால் மொத்த கிரிக்கெட் உலகமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

Also Read | திருடிய பணத்தில் புது பைக்.. வாட்சப் ஸ்டேட்டசால் வசமாக சிக்கிய கும்பல்.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்..!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேசம் கைப்பற்றியது. பின்னர் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. டிசம்பர் 22ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. அதில் இந்திய அணியின் அட்டகாசமான பந்துவீச்சின் காரணமாக வங்கதேசம் 231 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக மேட்ச் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இருப்பினும் அஸ்வின் - ஷ்ரேயாஸ் அய்யர் இணை தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் 42 ரன்களும் ஷ்ரேயாஸ் 29 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியமான நேரத்தில் 42 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்களையும் வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக தனி நபர் விருது பெற்ற இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் அஸ்வின். இதுவரை 9 ஆட்டநாயகன் விருதையும், 9 முறை தொடர் நாயகன் விருதையும் வென்றிருக்கிறார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அதிக தனி நபர் விருது பெற்ற இந்திய வீரர்களின் வரிசையில் 19 விருதுகளுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். 18 விருதுகளுடன் அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இதனால் சச்சினின் இந்த பிரம்மாண்ட சாதனையை அஸ்வின் விரைவில் முறியடிக்கலாம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பேசிவருகின்றனர்.
அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர்கள் என்ற பட்டியலிலும் அஸ்வின் முதல் இடத்தில் இருக்கிறார். 5 விருதுகளுடன் சச்சின் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | கிறிஸ்துமஸ் Gift.. ரொனால்டோ-க்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வாயடைச்சுப்போன நெட்டிசன்கள்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
