"உன் சாய்ஸ்மா.. அப்பாவையே லவ் பண்ணு.. ஆனா நீ என்ன லவ் பண்லன்னாலும் நான் உன்ன லவ் பண்ணுவேன்..!” .. குட்டி மகனின் க்யூட் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகள் செய்யும் விஷயங்கள் எப்போதுமே அளப்பரிய ஆச்சரியங்கள் தரக்கூடியவை.

Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில் இணையதளத்தில் வைரலாகி வரக்கூடிய பல வீடியோக்கள் நம்மை நெகழ்ச்சியில் ஆழ்த்துவதுண்டு. அப்படித்தான் சுட்டி சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் பேசக்கூடிய உரையாடல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் சுட்டி சிறுவன் ஒருவனிடம் அவனுடைய அம்மா சில கேள்விகளை கேட்கிறார், அதன்படி, “நான் உன்னை லவ் பண்ண வேண்டுமா? உன் தந்தையை லவ் பண்ண வேண்டுமா?” என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவனும், “அது உன் சாய்ஸ் அம்மா.. நீ அப்பாவையே லவ் பண்ணு” என்று சோகமாக சொல்கிறார். அதன் பின்னும் விடாமல் கேள்வி கேட்கும் அந்த சிறுவனின் அம்மா, “சோகமாக சொல்றியே? ஒருவேளை நான் உன் தந்தையை மட்டும் லவ் பண்ணினால் நீ என்னை புறக்கணித்து விடுவாயா?” என்று கேட்கிறார்.
அதற்கு அந்த சிறுவன், “நான் உன்னை புறக்கணித்துவிட்டு எங்கே அம்மா செல்ல முடியும்? எங்கே போவது என்று கூட எனக்கு தெரியாது!” என்று அழகாக கூறுகிறான். மேலும் அந்த அம்மா, “அப்போது உன் தந்தையை லவ் பண்ணினால், நீ என்னை லவ் பண்ண மாட்டாயா?” என்று கேட்கும் போது, அதற்கு அந்த சிறுவன், “அப்படியெல்லாம் இல்லைம்மா.. நீ என்னை லவ் பண்ணலனாலும் நான் உன்னை லவ் பண்ணுவேன்” என்று பதில்களால் நெகழ்த்துகிறான். குறிப்பிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
