அட.. சச்சினுக்கு நடந்தது மாதிரி மெஸ்ஸிக்கும் நடந்திருக்கு! உலக கோப்பை வெற்றிக்கு பின் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.

Also Read | 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! FIFA2022
நேற்றைய இறுதிப்போட்டி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2வது கோல் அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இச்சூழலில் 81 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் எம்பாப்பே அடித்த முதல் கோல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கோலை எம்பாப்பே அடித்து அர்ஜென்டினா ரசிகர்களை உறைய வைத்தார்.
இதனால் 2-2 என போட்டி சமன் ஆனது. பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் இரு அணிகளுமே மீண்டும் ஒவ்வொரு கோல் அடிக்க 3-3 என மீண்டும் போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
இந்த கால்பந்து உலகக் கோப்பை தொடர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஞாபகப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இதற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர் & மெஸ்ஸி தான்.
இரண்டு ஜாம்பவான்களுக்கும் ஜெஸ்ஸி நம்பரில் (எண் 10) மட்டும் ஒற்றுமை கிடையாது. இந்த பல தருணங்களில் ஒற்றுமை உள்ளது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தோல்வி அடைந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி தோல்வி அடைந்தார். சரியாக 8 வருடம் கழித்து சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று சாம்பியன் ஆனார். அதேபோல் எட்டு வருடம் கழித்து மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று சாம்பியன் ஆகி உள்ளார்.
சச்சின் & மெஸ்ஸி இருவரும் அவர்கள் வென்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்.
அதேபோல் அவர்களின் அணியானது (இந்தியா (1983) & அர்ஜென்டினா (1986) ) 80களில் தங்களது உலகக் கோப்பையை வென்றிருந்தது.
உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பே இதுதான் தங்களது இறுதி உலக கோப்பை என்று அறிவித்துவிட்டு இரண்டு வீரர்களும் உலக கோப்பை தொடரில் ஆடினர்.
தற்போது மெஸ்ஸி தனது ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
இந்த தருணங்களை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் தற்போது டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Also Read | "டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022

மற்ற செய்திகள்
