‘உன் தொல்ல தாங்க முடியல’... 'அதனால் பிளாக் பண்ண சொல்லப் போறேன்’... ‘இந்திய வீரரின் வீடியோக்களால்’... 'கடுப்பான வெஸ்ட் இண்டீஸ் வீரர்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Apr 27, 2020 06:52 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹாலை கடுப்பில், மரண கலாய் கலாய்த்துள்ளார்.

Gayle brutally trolls Chahal, I’m going to block you

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளனர். அப்படி ஒரு இன்ஸ்டாகிராம் நேரலையில்வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஈடுபட்ட போது இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹாலை பங்கமாக கலாய்த்துள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹால் , எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர்.

தற்போது லாக்டவுனால் அவர் படு பிஸியாக, நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் சாஹால் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் தனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்த கெயில், அவரை சமூக வலைதளத்தில் ப்ளாக் செய்யப்போவதாகவும் கூறினார். இதுகுறித்து கெயில் கூறுகையில், “நான் டிக் டாக்கிடம் உன்னை உண்மையாகவே ப்ளாக் செய்யும்படி தெரிவிக்கப்போகிறேன். சமூக வலைதளத்தில் நீ அதிகம் வெறுப்பேற்றுகிறாய்.

இப்போதே நீ சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேற வேண்டும். சாஹாலால் நாங்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டோம். இனிமேல் என் வாழ்நாளில் நான் உன்னை பார்க்கவே கூடாது. நான் இப்போதே உன்னை ப்ளாக் செய்துவிடுகிறேன்” என்று கலாய்த்து தள்ளியுள்ளார். சாஹாலின் சமூக வலைதள வீடியோக்களால் அவருடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் ஒருவர் கடுப்பாவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சாஹாலின் வீடியோக்களால் கடுப்பான ராயல் சாலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி அவரை கோமாளி என்றார். 

விராட் கோலி, டிவிலியர்ஸ் உடன் இன்ஸ்டா நேரலையில் பேசிய போது, “ நீங்கள் சாஹாலின் டிக் டாக் வீடியோக்களை பார்த்துள்ளீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக சென்று பாருங்கள். அப்படி பார்த்தால், அவருக்கு 29 வயதாகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். சரியான கோமாளி” என்றார். இதேபோல் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் கூறியுள்ளார்.