'இன்று மிகப்பெரிய 'சவால்' காத்திருக்கிறது'... பிரபல வீரர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 12, 2019 12:41 PM
ஐ.பி.எல். லீக் போட்டியில், 'இந்த நாள் மிகப்பெரும் சவாலான நாள்தான்' என்று மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா கூறியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இறுதிப் போட்டியில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன. 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் பெரிய பலம் தோனி தான். மிடில் ஆர்டரில் தோனியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தி விட்டாலே மும்பை அணிக்கு பாதி வெற்றி கிடைத்தது போலத் தான். இந்நிலையில், மும்பை அணியின் கேப்டனான, ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான இறுதிப் போட்டி, மற்ற போட்டிகளைப் போன்று இதுவும் ஒரு போட்டிதான் என்று தெரிவித்துள்ளார். கடந்த போட்டிகளின் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல், தற்போதைய போட்டியில்தான் தங்களது அணி வீரர்கள் கவனம் செலுத்துவதாக ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
