கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல்.. போட்டியின் முதல் பந்து?.. முதல் ரன்?.. விறுவிறுப்பான தொடக்க ஆட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 23, 2019 08:03 PM

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

IPL 2019: CSK won the toss

இதில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களான தோனியும், விராட் கோலியும் கேப்டன்களாக களமிறங்கிவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ஐபிஎல் முதல் போட்டியின் டிக்கெட் விற்பனைத் தொகையின் ஒரு பகுதி நிதியாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், பார்தீவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் தீபக் சகர் வீசிய முதல் பந்தில் கோலி ஒரு ரன் அடுத்து ஐபிஎல் 2019 -ன் ரன் கணக்கைத் தொடங்கியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #VIVOIPL2019 #WHISTLEPODU #YELLOWVSRED