‘உலகக் கோப்பை வர நேரம்பாத்தா இப்டி நடக்கணும்’.. பயிற்சியில் பலத்த காயமடைந்த அதிரடி வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 10, 2019 04:51 PM

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2019: Rohit Sharma injures himself in practice session

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று(10.04.2019) இரவு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான 24 -வது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற உள்ளது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்ற வீரரகளுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாரதவிதமாக காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஆனால் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பாக எந்த வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மும்பை அணியின் சார்பாக விளையாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கண்ணில் காயத்துடன் விளையாடிய போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை வரயிருக்கும் சமயத்தில் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்படுவது குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : #IPL #IPL2019 #MUMBAIINDIANS #ONEFAMILY #INJURY #ROHITSHARMA