30 நிமிடங்கள் மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஐபிஎல் வீரர்கள்.. ரசிகர்களிடையே பரபரப்பு.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 23, 2019 07:12 PM

பயிற்சியில் ஈடுபடவந்த ஐபிஎல் வீரர்களை மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL2019: Rajasthan Royals players stuck outside Sawai Mansingh stadium

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களான தோனியும், விராட் கோலியும் கேப்டன்களாக களமிறங்கிவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதற்கடுத்து நடக்கவுள்ள போட்டிகளுக்காக மற்ற அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் மற்ற வீரர்கள் பயிற்சிக்காக வந்த போது சுமார் 30 நிமிடங்கள் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கும், ராஜஸ்தான் விளையாட்டு ஆணையத்திற்கும் இருக்கும் மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Tags : #IPL #IPL2019 #IPL12 #VIVOIPL2019 #PLAYERS