‘இது சும்மா டிரெய்லர் மட்டும்தான்’.. வரலாறு படைத்த சிஎஸ்கே சிங்கக்குட்டி.. விண்ணைப் பிளந்த விசில் சத்தம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 23, 2019 11:12 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரெய்னா வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனின் முதல் போட்டி இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், பார்தீவ் பட்டேலும் களமிறங்கினர். இதில் கோலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாக 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆர்சிபி அணி இழந்தது.
இதனைத் தொடர்ந்து 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய ரெய்னா அதிரடியாக விளையாடி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார்.
