‘ரசிகனை ரசிக்கும் தலைவா’..‘கூல் கேப்டன், இப்போ தூள் கேப்டன்’.. பட்டையை கெளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 23, 2019 12:10 AM

ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ரசிகர்களுக்காக தோனி செய்யும் ஒவ்வொரு செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni whistles for fans request, video viral on social media

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடினர். அப்போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து தோனியைப் பார்க்க வந்தார். அந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நாளை(23.03.2019) ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு தோனி கிரிக்கெட் வீரர்களுக்கான பேருந்தில் செல்லும் போது ரசிகர் ஒருவர், ‘தல ஒரு விசில் அடிங்க’ என அன்புடன் கேட்க உடனே அவருக்கான தோனி உடனே விசில் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSD #CSK #IPL2019 #WHISTLEPODU #YELLOVE #HOWTOMAKEAFANHAPPY101🦁