‘ஆலோசனை கூற வந்த ரோஹித் ஷர்மா, அலட்சியப்படுத்திய பும்ரா’.. வைரலான காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Feb 25, 2019 05:01 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் ஷர்மாவின் ஆலோசனையை தவிர்க்கும் கோலி, பும்ராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 127 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 19 -வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீச வந்தார். அப்போது விராட் கோலி, பும்ரா, ரோகித் ஷர்மா ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தினர்.
அதில் ரோஹித் ஷர்மா ஏதோ ஆலோசனை சொல்ல முயற்சிக்க, அதை கோலி மற்றும் பும்ரா ஆகிய இருவரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த துணை கேப்டன் ரோஹித் ஷர்மா சிறுது நேரம் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Saw This in middle of the match. So disrespectfull 😑#INDvsAUS #ViratKohli #RohitSharma #bumrah #TeamIndia pic.twitter.com/VUAgXc1nx8
— Jay Patel (@_imjaypatel_) February 24, 2019
