‘மழையால் போட்டி நின்னு பாத்திருப்போம், இது புதுசால்ல இருக்கு’.. போட்டியின் நடுவில் நடந்த பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 28, 2019 10:19 PM
தென் ஆப்பிரிக்கா-இலங்கைக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்தில் தேனிக்கள் வந்ததால் பரபரப்பை ஏற்பட்டது.

உலகக்கோப்பை லீக் போட்டியின் 35 -வது போட்டி இன்று ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக குசல் பெரேரா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகிய இருவரும் 30 ரன்கள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிஸிஸ் 96 ரன்களும், ஹசிம் அம்லா 80 ரன்களும் எடுத்தனர். ஆனால் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மைதானத்தின் உள்ளே தேனிக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீரர்கள் அனைவரும் தரையில் படுத்துக்கொண்டனர். இதனை அடுத்து தேனிக்கள் பறந்து சென்றதும் போட்டி மீண்டும் துவங்கியது.
Bees two nations have a history!#SLvSA | #CWC19 pic.twitter.com/rEY9T7yhUD
— Cricket World Cup (@cricketworldcup) June 28, 2019
