"அதுக்கு நானும் காரணமா??.." நைசாக நழுவும் ரவி சாஸ்திரி??... 'மறுபக்கம்' தனி வழியில் பயணிக்கும் 'ரோஹித்'... "என்ன தான் நடக்கப் போகுதோ??..."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அணி அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறவில்லை என தேர்வுக் குழு அறிவித்திருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோஹித் தொடர்ந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை கிளப்பியது.
காயம் காரணமாக இந்திய அணியில் தேர்வாகாத ரோஹித் எப்படி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியும் என்றும், வேண்டுமென்றே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் சேர்ந்து தான் ரோஹித்தை புறக்கணிக்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், ரவி சாஸ்திரி ரோஹித் சர்மாவை ஓய்வு எடுக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். ரோஹித் அவசரமாக போட்டிகளில் களமிறங்கக் கூடாது என்றும், காயத்துடன் ஆடியதால் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என அறிவுரை கூறியுள்ளார்.
மேலும், ரோஹித் புறக்கணிப்பிற்கு ரவி சாஸ்திரியும் காரணம் என்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ரவி சாஸ்திரி, 'இந்திய அணி தேர்வு குழுவில் நான் இடம்பெறவில்லை. அதே சமயம் ரோஹித் அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவருடைய காயம் குறித்து அளிக்கப்பட்ட ரிப்போர்ட் தான்' என தெரிவித்துள்ளார்.
ரோஹித் - கோலி விவகாரம் நாளுக்கு நாள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ரவி சாஸ்திரியும் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், ரவி சாஸ்திரியோ பெரிதாக எதுவும் பதில் தெரிவிக்காமல் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். மறுபக்கம் ரோஹித் தொடர்ந்து காயத்தை பொருட்டாக கூட மதிக்காமல் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் களமிறங்க முயற்சி செய்து வரும் நிலையில், தன்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை அவர் காட்டுவதை போலவே உள்ளது.
இனி வரும் நாட்களில் அவரது உடல் நிலை குறித்து தெளிவான தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் தான் உண்மையான நிலவரம் என்ன என்பது தெரிய வரும். அத்துடன் ரோஹித் தேர்வாகாமல் போனது தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
