"ரோஹித்துக்கு இந்தியன் 'டீம்'ல ஏன் இடம் கிடைக்கல??..." என்ன தான் காரணமா இருக்கும்??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் முடிந்ததும் அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டி, ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணியை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், அணியில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சில இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக தான் அணியில் ரோஹித் ஷர்மாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என பிசிசிஐ சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வேண்டுமென்றே தான் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
காரணம், பிசிசிஐ இந்திய அணியை அறிவித்த மறுநாள் ரோஹித் ஷர்மா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. காயமடைந்த ஒருவர் எப்படி பயிற்சியில் ஈடுபடலாம் என்ற கேள்வி பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.
மேலும் விராட் கோலி தான் காரணம் என்றும், ரோஹித்தை வேண்டுமென்றே ஓரம் கட்டத் தான் கோலி அரசியல் செய்து வருவதாகவும் பலர் ரோஹிதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிலையில், ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறாமல் போனதற்கு இந்திய அணியின் பிசியோவாக இருக்கும் நிதின் படேல் அளித்த ரிப்போர்ட் தான் காரணம் என்கிறார்கள்.
ரோஹித் ஷர்மாவின் உடல் சோதனை செய்ய இரண்டு சிறப்பு மருத்துவர்களை நிதின் படேல் அணுகியுள்ளார். ரோஹித்தை பரிசோதித்த அந்த மருத்துவர்கள், அவர் இப்போது ஆட முடியாது. 2-3 வாரத்திற்கு மேல் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என தெரிவித்தனர்.
இந்த ரிப்போர்ட் இந்திய தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், ரோஹித்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அவரை ஆஸ்திரேலியா தொடரில் தேர்வுக் குழு இடம்பெறச் செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், அவர் விரைவில் குணமடைந்து திரும்பினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் அணியில் இடம் கிடைக்கலாம் என்றும் ஒரு யூகம் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
