"'கோலி' பண்ண தப்ப ... 'தோனி' இன்னைக்கி கண்டிப்பா பண்ண மாட்டாரு..." ஒரே அடியா போட்டு உடைச்ச முன்னாள் 'வீரர்'... 'காரணம்' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக, பெங்களூர் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டன்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. காரணம், நல்ல பார்மில் இருந்த டிவில்லியர்ஸை முதலிலேயே களமிறக்காமல் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கோலி களமிறக்கினார்.
ஷார்ஜா போன்ற மைதானத்தில் டிவில்லியர்ஸை முதலிலேயே ஆட விடாமல் போனதால் பெங்களூர் அணிக்கு பெரிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் தோல்வி பெற்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை ரசிகர்கள் அதிகம் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் தோனி, விராட் கோலி செய்த தவறை செய்யமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 'சென்னை அணி வீரர் பாப் டு பிளஸ்ஸி டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவார் என நினைக்கிறேன். கடந்த சில ஆட்டங்களில் தவறான ஷாட்களை அடித்திருந்தார். அதனை அவர் சரி செய்து கொள்ள வேண்டும்.
பெங்களூர் அணி டிவில்லியர்ஸை கடைசியாக களமிறக்கி கோலி தவறு செய்தது போல தோனி செய்யாமல் டு பிளஸ்ஸியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவார் என நம்புகிறேன்' என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
