"'பேட்டிங்' ஆடுறப்போ... ரெண்டு பேரும் 'கோமா'ல இருந்தீங்க போல..." 'கோலி', 'டிவில்லியர்ஸை' விட்டு விளாசிய முன்னாள் இந்திய 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் சிறந்த இணையான கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் சில ஓவர்கள் ஒன்றாக இணைந்து ஆடிய போது அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோலி - டிவில்லியர்ஸ் இணை 10 ஒவர்களுக்கு மேல் களத்தில் நின்றும், பெரிய அளவிலான ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. இருவரும் பந்துக்கு ஏற்ற ரன்களே எடுத்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தன்னுடைய யூ டியூப் சேனலில் விமர்சனம் செய்துள்ளார்.
'முதல் இன்னிங்சின் 7 ஆவது ஓவரில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த இணை 18 ஆவது வரை கோமாவில் இருந்ததென நினைக்கிறேன். இதனிடையே ஒரு தூக்கம் வரை நான் எடுத்துக் கொண்டேன். நான் எழுந்து பார்த்த போதும் அவர்கள் அதே வேகத்தில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் பெரிய ஷாட்கள் எதுவும் முயற்சி செய்யவில்லை' என அந்த வீடியோவில் ஷேவாக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சென்னை கேப்டன் தோனியின் கேப்டன்சியை சேவாக் புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
