அடுத்த ரவுண்டுக்கு சென்ற 'சூர்யகுமார்' விவகாரம்... "'ஆண்டவா', இதுக்கு ஒரு எண்டே இல்லையா??..." எகிறும் 'பரபரப்பு'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான இந்திய அணியை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், அணியின் தேர்வு பரபரப்பை உருவாக்கியது. காரணம், அணியில் சில வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது தான்.
அதிலும் குறிப்பாக, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலரை அதிருப்திக்குள் ஆக்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ், பல போட்டிகளில் சிறப்பாக ஆடி மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆனாலும், இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. இந்திய அணியின் கேப்டன் கோலி தான் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாமல் போனதற்கு காரணம் என்றும் ஒரு சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், மும்பை அணி தனது முந்தைய போட்டியில் பெங்களூர் அணியை எதிகொண்டது. அப்போது சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி மும்பையை வெற்றி பெற வைத்தார். அப்போது, அந்த போட்டி நடுவே கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மாறி மாறி பார்த்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆட ஆரம்பித்த வருண் சக்ரவர்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது, ஆனால் ஏன் சூர்யகுமாருக்கு இடமில்லை என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோலி அரசியல் செயகிறார், தகுந்த வீரருக்கு அவர் வாய்ப்புகள் வழங்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஆனால் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள மற்ற வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் திறன் ஒப்பிட்டு டேட்டா ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள மனிஷ் பாண்டே, சுப்மான் கில், ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை விட சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சராசரி குறைவாக உள்ளது. அதே போல, முதல் தர போட்டிகளில் மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் ரன்களும் குறைவாக தான் சூர்யகுமார் அடித்துள்ளார்.
இதனால், மற்ற இளம் வீரர்களுடன் அவரை ஒப்பிட்டால் சூர்யகுமார் யாதவ் ஓரளவு சிறந்த வீரர் இல்லை என்றும், சில சிறந்த இன்னிங்ஸ் சிறப்பாக ஆடியதாக அவரை அணியில் எடுக்க வேண்டும் என்றால், இந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்து வரும் இளம் வீரர்களான இஷான் கிசான், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கும் இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என ஒரு தரப்பு தெரிவித்து வருகின்றது.
தேவையில்லாமல் கோலி மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம். அவர் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். கோலிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டித் தான் இப்படி செய்கின்றனர் என்றும் அந்த தரப்பு கோலிக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
என்ன தான் சூர்யகுமாரை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டாலும், இதற்கு முன்பாவது அவருக்கு சர்வதேச அணியில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக நல்ல இன்னிங்ஸை அவர் ஆடத் தவறினாலும், எந்த இடத்திலும் இறங்கி அசத்தக் கூடியவர் சூர்யகுமார். இதன் காரணமாக, அவர் சர்வதேச அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தான் ரசிகர்கள் அதிருப்தியால் கோலி மற்றும் இந்திய அணி தேர்வுக் குழுவை குற்றம் கூறி வருகிறது என சூர்யகுமாருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

மற்ற செய்திகள்
