எல்லா புகழும் என் அம்மாவிற்கே...! 'எனக்கே டவுட்டு...' 'எப்படிடா லாங் சிக்ஸ் அடிக்கிறேன்னு...' - அம்மாவிற்கு பெருமை சேர்த்த இஷான் கிஷன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Nov 02, 2020 06:47 PM

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் என இரு அணிகள் மோதிய நேற்றைய (01-11-2020) ஆட்டத்தில் மும்பை அணியின் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அடித்த மூன்றாவது சிக்ஸர் டி20-யில் அடித்த 100-வது சிக்சர் என்ற இலக்கை எட்டியுள்ளார்.

mi Ishan Kishan has praised mother\'s cooking reason sixes

அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 72 ரன்கள் என்று டெல்லி பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார் இஷான் கிஷன்.

இதுகுறித்து கூறிய இஷான் கிஷன், 'சில நேரங்களில் எனக்கே சந்தேகம் மற்றும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி என்னால் மட்டும் இப்படி நீண்ட தூர சிக்சர்களை அடிக்க முடிகிற்து. ஆனால் என் சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் என் அம்மா தான். என் அம்மாவின் சமையல் தான். அவர் எப்போதும் எனக்கு சத்தான உணவுகளையே அளிப்பார்.

அதுபோல என்னுடைய பயிற்சியில் சிக்சர்களை அடித்துப் பழகியதும் காரணம், அதில்தான் வெற்றி அடங்கியுள்ளது' என கூறி தன் தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார் மும்பை அணி வீரர் இஷான் கிஷன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mi Ishan Kishan has praised mother's cooking reason sixes | Sports News.