"இந்த ஆட்டம் போதுமா கோலி??..." வெச்ச கண்ணு வாங்காம 'மாஸ்' காட்டிய 'சூர்யகுமார்' யாதவ்... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியா அணி தொடருக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறாதது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, பல ஐபிஎல் சீசன்களில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவிற்கு இதுவரை சர்வதேச அணியில் இடம் கிடைத்ததில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக அவர் விளையாடி வரும் நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் பெயர் நிச்சயம் இடம்பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவரது பெயர் இல்லாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறை ஐபிஎல் தொடரில் களமிறங்கிய இளம் வீரர்கள் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் பெயர் இல்லாதது ஏமாற்றத்தை அளித்தது. அணியில் இடம்பெற இதை விட திறமை என்ன வேண்டும் என பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த 165 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மிகச் சிறப்பாக ஆடி, மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அணியில் இடம் கிடைக்காத நிலையில், தனது திறமையை மீண்டும் நிரூபித்து தக்க பதிலடியை சூர்யகுமார் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் ஒருபுறம் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 13 ஆவது ஓவரின் இறுதிப் பந்தை சூர்யகுமார் எதிர்கொண்டார். அவர் பேட் செய்த பந்து கோலி கைக்கு செல்ல பந்தை எடுத்துக் கொண்ட கோலி, சூர்யகுமாரை நோக்கி 'sledging' செய்யும் முயற்சியில் வந்தார்.
வைத்த கண் வாங்காமல் கோலி சூர்யகுமாரை பார்க்க, பதிலுக்கு சூர்யகுமாரும் கோலியை பார்த்துக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட இருவரும் மோதிக் கொள்வது போன்றே இருந்தது. இந்திய அணியில் சூரியகுமார் இடம்பெறாத நிலையில், தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் ஐபிஎல் அணியை அனல் பறக்க பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவ் மாஸ் காட்டிய இந்த வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
KOHLI vs SURYA STARE WAR 😱🔥
SKY won in the end 😨 pic.twitter.com/xkldqG5Qs0
— middle stump (@middlestump4) October 28, 2020