“குடும்பத்தச் சேர்ந்தவங்க வாட்ஸ் ஆப் குரூப்ப விட்டே போய்ட்டாங்க! ஃபோட்டோக்களை நீக்க சொல்றாங்க! ஆனால்..”.. சர்ச்சை போட்டோஷூட் விவகாரத்தில் புதுப்பெண் கூறிய ‘அதிரடி பதில்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 02, 2020 06:27 PM

சமீப காலமாக  இளைஞர்கள் பலர் ப்ரீ வெட்டிங் வீடியோ, போட்டோ எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

We wont remove ,says Kerala Couple trolled for viral wedding shoot

குறிப்பாக கேரளாவில் பல இளம் ஜோடிகள் கவர்ச்சியில்  எல்லைமீறும் வகியிலான புகைப்படங்கள் எடுத்து முகம் சுழிக்க வைப்பதாக தொடர் கருத்துக்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், கேரளாவை சேர்ந்த  ஜோடிகளான, தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்யும் கார்த்திக்கும் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் படிப்பை முடித்த லட்சுமி ஹ்ருஷியும்  மணமகள் ஊரான கொல்லத்தில் உள்ள ஒரு கோயிலில் செப்டம்பர் 16ம் தேதி இந்த திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு முன் இந்த இளம் ஜோடி பசுமையான தேயிலைத் தோட்டத்தில், வெள்ளை மென்பட்டுப் போர்வைய போற்றியபடி, கவர்ச்சியாக, நெருக்கமாக, ஒருவரை ஒருவர் துரத்தியபடி என விதவிதமாக ப்ரீ வெட்டிங் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். கார்த்திக்கின் நண்பர், அகில் கார்த்திகேயன்தான் இந்த சர்ச்சையாக மாறிய படங்களை எடுத்தவர். இந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. அந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ஒருபுறமும், இன்னொருபுறம்,  படங்கள் அற்புதமாகவும், அழகாகவும் இருப்பதாக பலர் கருத்துத் தெரிவித்ததுடன் மோசமான விமர்சனங்களை புறக்கணிக்கும்படி சிலர் கூறினர்.

We wont remove ,says Kerala Couple trolled for viral wedding shoot

பலர் சமூக வலைதலங்களில் இருந்து இந்த படங்களை நீக்குமாறு கூறினார்கள். ஆனால் புதுமணத்தம்பதிகளோ, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய புதுப்பெண் லட்சுமி பிபிசியிடம், “தொடக்கத்தில் எங்கள் பெற்றோர்கூட அதிர்ந்தனர். ஆனால் நாங்கள் ஏன் இப்படி செய்ய விரும்பினோம் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். பிறகு அவர்கள் புரிந்துகொண்டனர். இன்னும் சில உறவினர்கள் நாங்கள் மேலை நாடுகளை காப்பி அடிப்பதாக கூறினர். இதெல்லாம் தேவையா? நமது பண்பாட்டை மறந்து விட்டீர்களா? அந்தப் புகைப்படங்களை நீக்குங்கள் என பலர் வலியுறுத்தினார்கள்.  குடும்ப வாட்சப் குழுக்களில் இருந்து சிலர் நீங்கினார்கள். ஆனால் அந்த படங்களை அகற்றினால், நாங்கள் தவறு செய்ததாக அர்த்தமாகிவிடும். அத்துடன் அந்த படப்பிடிப்பின்போது மென்பட்டுப் போர்வைக்குள்ளே நாங்கள் ஆடை அணிந்துதான் இருந்தோம்” என கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. We wont remove ,says Kerala Couple trolled for viral wedding shoot | India News.