VIDEO : "யோவ்... ஆனாலும் உனக்கு ரொம்ப தான் 'நக்கல்' யா... சைக்கிள் கேப்பில் 'கோலி'யை செஞ்சு விட்ட 'ராகுல்'... வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி எதிர்கொள்கிறது.

இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. மற்றொரு அணியான பஞ்சாப், 7 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி வென்ற ஒரு ஆட்டமும் பெங்களூர் அணிக்கு எதிராக வென்றதாகும். அந்த போட்டியில், பஞ்சாப் கேப்டன் ராகுல் அதிரடியாக ஆடி சதமடித்து இருந்தார். முன்னதாக, அவர் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை கோலி தவற விட்டார். இதன் காரணமாக, சதமடித்து ராகுல் அதிரடி காட்டிய நிலையில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் உரையாடினர். அப்போது பேசிய ராகுல், 'நாங்கள் வென்றுள்ள ஒரு ஆட்டமும் பெங்களூர் அணிக்கு எதிராக தான். அதனால் இன்றைய போட்டியில் சற்று நம்பிக்கையுடன் களமிறங்குவோம். உங்கள் அணி ஃபீல்டர்கள் இன்னும் சில கேட்ச்களை தவற விடுவார்கள் என நம்புகிறேன்' என ராகுல் கோலியை குறிப்பிட்டு கிண்டல் செய்திருந்தார்.
இதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்ன கோலி, 'இந்த முறை அப்படி நடக்காது. நான் அதே இடத்தில் தான் ஃபீல்டிங் செய்யப் போகிறேன். அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பந்துகளை அடிக்க வேண்டும்' என ராகுலிடம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Best part in the chat session of #ViratKohli and #KLRahul 😂😂😂😂 pic.twitter.com/FQvB2IxCAI
— Tamil Viratians 🔥 (@Tamil_Viratians) October 14, 2020

மற்ற செய்திகள்
