'நினைச்சத விடவே நிலைமை ரொம்ப மோசமா?!!'... 'அப்போ இனி அவர IPLல கூட பாக்க முடியாதா???'... 'வெளியான பரபரப்பு தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியிலும் அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இந்நிலையில் அவருக்கு முட்டிக்கு அருகில் ஏற்பட்டுள்ள காயம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இவருக்கு ஏற்பட்டதாக கருதப்படும் காயத்தை விட இப்போது நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இரண்டு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டதில், அந்த இரண்டு ரிப்போர்ட்டிலும் அவருக்கு ஓய்வு அவசியம் எனவும், அவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடக் கூடாது எனவும்தான் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பிசிசிஐ மருத்துவ குழு ரோஹித் சர்மாவை நாளை சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சோதனை முடிவுகளை பொறுத்தே அவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தொடரலாமா கூடாதா என்பது கூட முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாளை சோதனைக்கு பின் பெரும்பாலும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரோஹித் சர்மா ஒருவேளை மொத்தமாக ஐபிஎல்லில் இருந்து வெளியேறாமல் இப்படியே ஆடும் அணியில் இடம்பெறாமல் அணிக்கு ஆலோசனை மட்டும் வழங்கிக்கொண்டு நீடிக்கலாம் எனவும், அல்லது அவர் இந்தியா திரும்பி சிகிச்சை முடித்து காயம் சரியானால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இவை அனைத்துமே நாளை செய்யப்படும் மருத்துவ சோதனையின் முடிவுகளை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மற்ற செய்திகள்
