'ரசிகர்களின் மனதில் 'செஞ்சுரி' அடித்த 'ஹிட்மன்'... 'போட்டிக்கு பின்பு நெகிழவைத்த 'ரோஹித்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 03, 2019 09:08 AM

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ரோஹித் சர்மா, அபாரமாக விளையாடி தனது 26 சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த (4 சதங்கள்) இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் உலகக்கோப்பையில் 6 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

Rohit Sharma gifts autographed hat to fan who got hit by his six

இதனிடையே நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் பௌலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட ரோஹித் சர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். அவ்வாறு ரோஹித் சிக்சர் அடித்த போது, போட்டியை ரசித்து கொண்டிருந்த மீனா என்ற ரசிகை மீது பந்து பட்டது. இருப்பினும் அவருக்கு காயம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. இதையடுத்து போட்டி முடிவடைந்த பிறகு மீனாவை ரோஹித் சந்தித்தார். இதனை சற்றும் எதிர்பாராத மீனா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.

இதையடுத்து மீனாவிடம் நலம் விசாரித்த ரோஹித் சர்மா, தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியை பரிசாக வழங்கினார். அவரிடம் சிறிது நேரம் உரையாடிய அவர், மீனாவுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். ரோஹித் சர்மாவின் இந்த செயல் மீனாவை மட்டுமல்லாது அங்கிருந்த அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : #CRICKET #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICCWORLDCUP #ROHIT SHARMA #AUTOGRAPHED HAT