‘நம்ம சிங்கம் திரும்ப வந்துருச்சே’!.. இன்ஸ்டாகிராமில் மாறிமாறி ‘பாசமழை’ பொழிந்த இரு வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியின் கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த சில தினங்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் மும்பைக்கு சென்று பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ என்ற அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, தற்போது பயிற்சியில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரெய்னா விளையாடவில்லை. சொந்த காரணங்களுக்காக அப்போது அவர் இந்தியா திரும்பினார்.
அதனால் நீண்ட இடைவெளிக்கு பின் சென்னை அணியில் ரெய்னா இணைந்துள்ளதால், அவரை வரவேற்கும் விதமாக சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரர் பிராவோ, ‘நம்முடைய சிங்கம் திரும்ப வந்துவிட்டது’ என ரெய்னாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ளார். இதற்கு, ‘சாம்பியனின் டான்ஸை பார்க்க காத்திருக்க முடியவில்லை’ என ரெய்னா பதிலளித்துள்ளார். சமீபத்தில் பிராவோவும் சிஎஸ்கே வீரர்களுடன் பயிற்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
