VIDEO : "ப்பா, என்ன 'பவுலிங்' இது?..." 'இளம்' வீரர் வீசிய பந்தில்... கிளீன் 'போல்டு' ஆன 'தோனி'!!... "யாரு சாமி இந்த பையன்??"... 'மிரள' வைத்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதையடுத்து, சில அணிகள் தற்போதே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni), அம்பத்தி ராயுடு, ஹரிசங்கர் ரெட்டி, சாய் கிஷோர், கெயிக்வாட் உள்ளிட்ட வீரர்கள் தற்போதே பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு வரை, அனைத்து முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், 13 ஆவது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியது. இதனால், இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முன்னைப்பில் சென்னை அணி வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தங்களுக்குள்ளேயே இரு அணிகளாக பிரித்து பயிற்சி போட்டி ஒன்றில் மோதினர். இந்த போட்டியில், கேப்டன் தோனி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 22 வயதான இளம் வீரர் ஹரிஷங்கர் ரெட்டி (Harishankar Reddy) மிக அற்புதமாக தோனியை போல்டு ஆக்கினார்.
மிகவும் வேகமாக அவர் வீசிய பந்து, ஸ்டம்பை பதம் பார்த்த நிலையில், இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
MS Dhoni gets clean Bowled in CSK's intra-squad practice match.#MSDhoni #HarishankarReddy #IPL2021 #IPL #IPL2021Auction #WhistlePodu #Thala61 #RitikaPhogat #babitaphogat #GeetaPhogat #HappyBirthdaySushanth #thursdayvibes #ThursdayThoughts #thursdaymorning #IndiaRejectsLICIPO pic.twitter.com/P0jnomfF0p
— Mihir (@Mihirarora121) March 18, 2021
உள்ளூர் போட்டிகளில் ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வரும் 22 வயதான ஹரிஷங்கர் ரெட்டியை, அவரின் அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
அவர் சிறப்பாக பந்து வீசுவதால், ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு தேர்வாவது போல, ஹரிசங்கரும் இந்த ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்துவரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
