‘பாதி பேர் ஆதரவு, பாதி பேர் எதிர்ப்பு’!.. டெல்லி அணியின் அடுத்த கேப்டன் இவர் தானா..? நடைபெறும் தீவிர ஆலோசனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற்று வருவதால், ஒருநாள் தொடரிலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்தது. அதனால் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 9-ம் தேதியில் இருந்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இவர் தலைமையிலான டெல்லி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
அதனால் டெல்லி அணியை யார் அடுத்து வழி நடத்த போகின்றனர்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில், அஸ்வின், ஷிகர் தவான், ரஹானே மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் பெயரும் இதில் அடிபடுவதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஸ்மித்தை, இந்தமுறை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக இளம்வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து Times of India பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அனைவரது முதல் சாய்ஸாக ரிஷப் பந்த் தான் இருந்தார். ஆனால் அவருக்கு கேப்டன்ஷியில் அதிக அனுபவம் இல்லை என சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கூடுதல் பொறுப்பால் அவரது ஃபார்ம் தடைபடும் என்ற கருதுவதாக சொல்லப்படுகிறது. பாதி பேர் ரிஷப் பந்த் கேப்டன் ஆக வேண்டும் என்றும், பாதி பேர் அவர் வேண்டாம் என்றும் கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் அந்த அணியின் நிர்வாகிகள் வீடியோ கான்ஃபரன்சிங்கில் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.