ரசிகர்களுக்கு 'சிஎஸ்கே' அணி கொடுத்த அசத்தல் 'சர்ப்ரைஸ்'!... வைரலாகும் வேற லெவல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும், துபாயில் வைத்து நடைபெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு நடைபெறவுள்ள 14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி தொடர்பான வீடியோ ஒன்றை, அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Thala Dharisanam! #WearOnWhistleOn with the all new #Yellove! #WhistlePodu 💛🦁
🛒 - https://t.co/qS3ZqqhgGe pic.twitter.com/Gpyu27aZfL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021
அந்த வீடியோவில், சிஎஸ்கே கேப்டன் தோனி, ஒரு பாக்ஸில் இருந்து புதிய ஜெர்சியை வெளியே எடுத்து அதனை அனைவரிடமும் காட்டுகிறார். புதிய தோற்றம் கொண்ட சென்னை ஜெர்சியில், இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு அஞ்சலி செலுத்துவத்தோடு, சிஎஸ்கே அணியின் லோகோவுக்கு மேல், மூன்று நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளது.
Up close and personal! The story of the all new #Yellove wear ▶️ https://t.co/HQrfg59FMf
🛒 - https://t.co/qS3ZqqhgGe#WhistlePodu 💛🦁 pic.twitter.com/c3plGuaLDz
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021
புதிய ஜெர்சி தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஏப்ரல் 10 ஆம் தேதி சந்திக்கவுள்ளது.

மற்ற செய்திகள்
