தீயாக பறந்த ஷாட்ஸ்!.. கண்ணுலயே கணக்கு போடும் 'தல' தோனி!.. சென்னை சூப்பர் கிங்ஸ் இன் FULL FORM!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஹரி நிஷாந்த் வலைப்பயிற்சியை தோனி கூர்ந்து கவனிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 சீசனுக்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இளம் வீரர் ஹரி நிஷாந்த் வலைப்பயிற்சியின்போது தீயாக ஷாட் ஆடி அசத்தியுள்ளார்.
அப்போது அவரது ஆட்டதை கேப்டன் தோனி பின்னால் நின்றபடி கூர்ந்து கவனித்துள்ளார்.
அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஹரி நிஷாந்த், "கூர்ந்து கவனிப்பவரின் பார்வைக்கு முன்னர் அடித்த ஷாட்" என கேப்ஷனும் போட்டுள்ளார்.
சயத் முஷ்டக் அலி தொடரில் தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார், ஹரி. அதனால் அவர் அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
