'இந்த வாட்டி 'கப்' RCBக்கு தான் போலயே'!.. கோலி ஓப்பனிங் முதல் ஐபிஎல் ஏலம் வரை... ஆர்சிபி-யின் மெகா ஸ்கெட்ச் 'இது' தான்!.. என்னங்க சொல்றீங்க!?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 சீசனில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி விளையாடவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, அதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தாங்கள் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே ஆலோசனை மேற்கொண்டதாக அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்தள்ளார்.
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி மோதவுள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணியில் இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டி20 தொடரின் 5வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி கோலி சிறப்பாக விளையாடியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபிக்காக விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவது குறித்து ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணியின் லைன்-அப் குறித்த ஆலோசனையில் இதுவும் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆலோசனையை அடுத்தே, அதற்கேற்ப ஏலத்தில் வீரர்களை தேர்ந்தெடுத்ததாகவும் ஹெசன் கூறியுள்ளார். ஏபி டீ வில்லியர்ஸ் விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்ட நிலையில், அதற்கும் ஆர்சிபி முகமது அசாருதீன் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
