VIDEO: VAATHI COMING DANCE!.. LIVE CRICKET!.. BEHINDWOODS மேடையில்... வேற லெவல் சம்பவம் செய்த 'சின்ன தல' ரெய்னா!!- DON'T MISS!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா Behindwoods மேடையில் தனது கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

திரைத்துறை, விளையாட்டு, சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் ஆகச்சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் Behindwoods Gold Icons விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
அதில், திரைத்துறை மற்றும் டிஜிட்டல் திரையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், CSK ரசிகர்களால் செல்லமாக 'சின்ன தல' என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார்.
அவருக்கு Behindwoods சார்பில், The Golden Globe Icon of Inspiration என்ற விருதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி கௌரவித்தார்.
அதைத் தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்; நிகழ்ச்சி நெறியாளர்களுடன் கிரிக்கெட் ஆடினார்.
பின்னர் பேசிய ரெய்னா, தனக்கும் தல தோனிக்கும் இடையேயான நட்பு குறித்தும், இந்த IPL-ல் சிஎஸ்கேவின் திட்டம் குறித்தும் விளக்கினார்.
மேலும், தனக்கும் நடிகர் சூரியாவுக்கும் உள்ள நட்பு குறித்தும் சிலாகித்து பேசினார்.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
