அதிமுக-வோட 'தேர்தல் அறிக்கைய' தான் மக்கள் விரும்புறாங்க...! 'அவங்க எலெக்சன் வந்தா மட்டும் தான் மக்கள்கிட்ட வராங்க...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தேர்தல் வரும்போது மட்டும் தான் திமுகவினர் மக்களை தேடி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
![eps says AIADMK election manifesto well received people eps says AIADMK election manifesto well received people](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/eps-says-aiadmk-election-manifesto-well-received-people.jpg)
போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (27-03-2021) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசுகையில், அதிமுக தொண்டர்களின் உழைப்பின் பலனாக தங்க தமிழ்ச்செல்வனுக்கு அரசியல் விலாசம் கிடைத்ததாக தெரிவித்தார். மேலும் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனை, டெபாசிட் இழக்கும் வகையில் தோல்வியடைய செய்ய வேண்டும்.
தேனி மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் தந்த ஒரே தலைவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் என புகழாரம் சூட்டிய முதல்வர், நூறு நாட்களில் பொதுமக்கள் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
திமுக கட்சியினர் பொய் சொல்லி மக்களை சந்திக்கிறார்கள் எனவும், தேர்தல் வரும்போது மட்டும் தான் திமுகவினர் மக்களை தேடி வருகிறார்கள். ஸ்டாலின் கனவு என்றைக்குமே அது கனவு தான் என தெரிவித்தார், ஸ்டாலின் அந்த புகார் பெட்டியைத் திறக்க போவது இல்லை. மனுக்களை படிக்கப் போவதுமில்லை.ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்து வரும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றும், தமிழகத்தில் சாதி மற்றும் மத சண்டைகள் அதிமுக ஆட்சியில் இருப்பதில்லை எனவும் குறிப்பிட்ட முதல்வர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)