"அட, நம்ம சின்ன 'தல'யா இது??.." வேட்டி, சட்டையோட நம்ம ஊரு ஆளு மாதிரி இருக்காரே.." அசத்தல் ஆட்டம் போட்ட 'ரெய்னா'... 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடிகர் விஜய்யின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'மாஸ்டர்'.

கொரோனா தொற்றின் காரணமாக, தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், அதன்பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. அதே போல, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங்' பாடல், பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது.
சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் பிரபலங்கள் வரைக்கும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் வரை, தங்களது வெற்றியை 'வாத்தி கம்மிங்' பாடலின் நடனத்துடன் தான் கொண்டாடினர்.
vaathi coming ft. suresh raina 🤩 pic.twitter.com/EuWLQbGA1R
— amazon prime video IN (@PrimeVideoIN) March 23, 2021
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, வரவிற்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். இதற்கான பயிற்சியையும் அவர் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வேட்டி சட்டையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ரெய்னா நடனமாடும் வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
முன்னதாக, 'Behindwoods Gold Icons' விருது மேடையில், வாத்தி கம்மிங் பாடலுக்கு ரெய்னா நடனமாடி அசத்தியிருந்தார். அதே போல தற்போது மீண்டும், அதே பாடலுக்கு வேட்டி சட்டையில், ரெய்னா நடனமாடியுள்ள வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
