‘உலக கோப்பைக்கான வர்ணனையாளர்களை அறிவித்தது ஐசிசி’!.. இந்தியாவில் இருந்து தேர்வாகியுள்ள நபர்கள் யார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 17, 2019 02:17 PM

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுரவ் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

icc announces the 24 commentators for ICC world cup 2019

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 24 வர்ணனையாளர்களை ஐசிசி அறிவுத்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் வர்ணனையாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

இதில், இந்தியா சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், ஹர்ஷா போக்ளே ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும், மற்ற நாடுகளை சேர்ந்த 21 பேர் சேர்த்து மொத்தம் 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, மைக்கேல் கிளார்க், குமார் சங்கரகரா, பிரண்டன் மெக்கல்லம், ஷான் பொல்லாக், மைக்கேல் ஹோல்டிங், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா, நாசர் ஹூசைன், சைமன் டோல், மார்க் நிகோலஸ் என மொத்தம் 24 பேர் வர்ணனையாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICC #SOURAVGANGULY #COMMENTATORS #SANJAY #HARSHA BHOGLE