11 மாத சிறைவாசத்துக்கு பின் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 20, 2019 01:15 PM

மருத்துவக் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும்படியாக செல்போனில் பேசியவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி.

professor nirmala devi comes out in bail from jail after 11 months

செல்போனில் பேசியபோது, ரெக்கார்டு செய்யப்பட்ட அந்த ஆடியோக்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை 331 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.  அவருடன் கைதான பலருக்கும் ஜாமின் கிடைத்துவிட்ட நிலையில் 11 மாதங்களாக ஜாமின் பெற முடியாமல் நிர்மலாதேவி இருந்துள்ளார்.

தொடர்ந்து நிர்மலாதேவி அவ்வாறு பேசியது யாருக்காக என்பது குறித்த சர்ச்சைகள் விவாதங்களாகின. அதன் உண்மைத் தன்மையை அறிய பல பத்திரிகை நிறுவனங்களும் போராடின. எனினும் நிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி வழக்கு தொடர்ந்ததோடு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார். பின்னர் நிர்மலாதேவியின் தரப்பு வழக்கறிஞர், அதனால் நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை விசாரிக்கும்படி கோரினார்.

அதன்படி, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிர்மலாதேவி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது எனவும், தனி நபர்களை அவர் சந்திக்கக் கூடாது என்கிற நிபந்தனைகளோடு நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து 11 மாத சிறை வாசத்துக்குப் பிறகு மத்திய சிறையில் இருந்து இன்று (மார்ச் 20, 2019) வெளியே வந்தார்.

Tags : #NIRMALADEVI #BAIL #JAIL