'இந்த வீடியோவை 'அஸ்வின்' பாத்தா என்ன ஆகும்'?...'கெட்ட பசங்க சார் இவனுங்க'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 09, 2019 07:41 AM

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பெரிய விவாத பொருளாக மாறி இருப்பது மான்கட் முறையில் அஸ்வின் செய்த அவுட் தான்.இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை இது குறைத்து விட்டதாகவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

Mankading Solved,New Technique Of Running video goes viral

ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை,மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால்,பந்துவீசுவதை பாதியில் நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்,மான்கட் முறைக்கு தீர்வு கிடைத்து விட்டதாக நெட்டிசன்கள் பலரும் சிறுவர்கள் விளையாடிய கிரிக்கெட் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள்.

சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது,நான் ஸ்டிரைக்கில் இருக்கும் ஒருவர்,மிக நீளமான தென்னை மட்டையை வைத்து கொண்டு ரன் எடுக்க சிறிது தூரம் வந்து கொண்டு ரன் எடுத்து விடுகிறார்.இந்த வினோதமான ஐடியா நிச்சயம் கைகொடுக்கும் என பலரும் இந்த வீடியோவை கிண்டலாக பகிர்ந்து வருகிறார்கள்.