'மேட்ச் இருக்கப்போ இப்டியா நடக்கணும்?'... 'கவலையில் இந்திய அணி வீரர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 26, 2019 11:31 AM

இந்திய- வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையேயானப் போட்டி இன்று நடைபெற உள்ளநிலையில், இந்திய வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

Dark clouds chase Team India to Manchester ahead of match against WI

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 நான்கு இடங்களை பிடித்து, அரையிறுதிக்குள் நுழைய பலத்தப் போட்டி நிலவுகின்றன. இதனிடையே, ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்திய அணி வீரர்கள் மைதானத்தில், பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. அங்கு விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், மைதானம் ஈரப்பதத்துடனே இருந்து வந்தது.

மேலும் வானம் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்படுவதால், பயிற்சி மேற்கொள்வதில், இந்திய அணியினர் திணறி வந்தனர். இதையடுத்து, இந்திய வீரர்கள் இண்டோர் கிரவுண்டில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வந்தனர். வெளியே பயிற்சி செய்தால்தான் வீரர்கள் அனைத்து விதமான ஷாட்களையும், பந்துகளையும் பயிற்சி செய்து பார்க்க முடியும். ஆனால் இண்டோர் கிரவுண்டில் அப்படி செய்ய முடியாததால், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இங்குதான் நடைபெற்றது.

இந்த மைதானம் பேட்டிங் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற முறை இங்கு போட்டி நடந்தபோது அடிக்கடி மழை குறுக்கிட்டது. ஆனால் இன்று மழையால் போட்டி தடைப்பட வாய்ப்பில்லை. ஏனெனில்,போட்டி நடக்கும் நேரத்தில், வானம் தெளிவாகவும், மழை குறுக்கீடு இல்லாமல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில், வீரர்கள் போராடி வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது பயிற்சி மேற்கொள்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கலால் வீரர்கள் கலக்கத்தில் இருந்தனர்.