'காயம் காரணமாக பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல்'... 'இங்கிலாந்து சென்ற இந்திய இளம் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 25, 2019 02:30 PM

இந்திய அணிக்கு வலைப் பயிற்சியில் பந்து வீச, இளம் வேகப் பந்து வீச்சாளரான நவ்தீப் சைனியை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளது பிசிசிஐ.

Navdeep Saini called up as net bowler for India

உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியின்போது, பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு, காலின் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அதிகபட்சம் 3 போட்டிகள் வரை அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்திய அணி வரும் 27-ம் தேதி மேற்கிந்திய தீவுகளை சந்திக்க உள்ளது.

இந்நிலையில் ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும், இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி, கடந்த திங்கள்கிழமையன்று இங்கிலாந்து சென்றார். வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில், பயிற்சியின் போது சற்று ஓய்வெடுக்க, வலைப் பயிற்சியில் பந்து வீச நவ்தீப் சைனியை தற்போது இங்கிலாந்துக்கு பிசிசிஐ அனுப்பியுள்ளது. இவர் தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது விராட் கோலியின், பெங்களூரு அணியில் விளையாடியுள்ளார்.

புவனேஸ்வர் குமார் உடல் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறியதை அடுத்து, வலைப் பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், வலைப் பயிற்சியில் பந்துவீச சென்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சகார், அவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் இந்தியா திரும்பினார். இதையடுத்தே, நவ்தீப் சைனி அழைக்கப்பட்டார். மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ரிஷப் பண்ட் உடன், நவ்தீப் சைனியும் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.