‘என்னது இவருதான் புது தோனியா..?’ புகழ்ந்தவரை விளாசித் தள்ளிய ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 25, 2019 02:28 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Jos Butler is the new Dhoni Fans at war over AUS coachs statement

பரம எதிரியான இரண்டு அணிகள் மோதும் போட்டி என்பதால் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரைப் பாராட்டிப் பேசி கடும் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ளார்.

ஜாஸ் பட்லர் பற்றிப் பேசிய அவர், “பட்லர் நம்ப முடியாத வீரர். அவர் பேட்டிங் ஆடுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் உலகக் கிரிக்கெட்டில் புதிய தோனியாக இருக்கிறார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் டக் அவுட் ஆவார் என நம்புகிறேன். அவர் சிறந்த அத்லெட். நம்ப முடியாத ஃபினிஷர்” எனக் கூறியுள்ளார்.

ஜஸ்டின் லாங்கரின் இந்தக் கருத்துக்கு ட்விட்டரில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த ஒப்பீடே தவறானது, தோனி அனுபவத்திலும், திறமையிலும், சாதனையிலும் முன்னணியில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஜஸ்டின் லாங்கர் கனவில் உள்ளார் என்றும் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அவருடைய கருத்தை ஆதரித்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI