'அமாவாச.. நீதான் பேசுறியா?'.. அப்போ இது வரலாற்றுப் பதிவு தான்!.. இந்திய வீரரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பாராட்டிய மஞ்ச்ரேக்கர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் கடும் போராட்டத்தை செய்து வருகின்றனர். அதன் பரபரப்பான கட்டத்தை தற்போது நெருங்கியுள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் திணறிய நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் இன்னிங்சில் இந்திய அணியை வாஷிங்டன் சுந்தர், புஜாரா அதிரடியாக ஆடி மீட்டனர். இரண்டாவது இன்னிங்சை பொறுத்தவரை அஸ்வினின் அபார பந்துவீச்சு கொஞ்சம் நம்பிக்கை அளித்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் அபார ஆட்டம் அந்த அணியின் ரன் குவிப்பை அதிகரித்து, நகர்த்திச் சென்றது. பிறகு அவர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 257 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு பிரகாசமான நிலையில் வாஷிங்டன் சுந்தர், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
ஆம் இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 331 ரன்களை எடுத்தது. ஒருபுறம் இந்திய பேட்ஸ்மேன்கள் கை கொடுத்து உதவினர். இன்னொருபுறம் ஒற்றை ஆளாக நின்று அஸ்வின் இங்கிலாந்து அணியை பந்துவீச்சால் திணற அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவர் விக்கெட் எடுத்துதன் மூலம் 100 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் அசத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியை சரியான முறையில் கையாண்டதற்கு கேப்டன் கோலிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். நெருக்கடியின் போது அவரது கேப்டன்சி நம்பிக்கை அளிப்பதாகவும் அது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவின் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோலியை இப்படி பாராட்டுவதெல்லாம் அரிதினும் அரிதான ஒன்று என கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.