VIDEO: குல்தீப் ‘கழுத்தை’ பிடிச்சு கோபமாக இழுத்த சிராஜ்.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்துச்சு?.. பரபரப்பை கிளப்பிய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடிரெஸ்ஸிங் ரூமில் குல்தீப் யாதவ் கழுத்தை முகமது சிராஜ் கோபமாக பிடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 578 ரன்களை இங்கிலாந்து அணி குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் மற்றும் டாம் சிம்லே 87 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மோதி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்து இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பினார். அப்போது முகமது சிராஜ், குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுத்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படமால் இருப்பதால், இருவரும் விளையாட்டாக சண்டை போட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
