VIDEO: ‘சம்பந்தமே இல்லாம அங்க ஏன் ஓடுனீங்க..?’.. விழுந்து விழுந்து சிரித்த கமெண்ட்டேட்டர்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களும், டாம் சிப்லே 87 ரன்களும் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியை பொறுத்தவரை, அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக் ரிஷப் பந்த் 91 ரன்களும், புஜரா 73 ரன்களும் எடுத்தனர். வாசிங்கடன் சுந்தர் 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய 151 ஓவரில், இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் அடித்த பந்து ஒன்று பேட்டில் எட்ஜ் ஆகி பின்னால் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், சம்பந்தமே இல்லாமல் பந்து சென்ற திசைக்கு எதிராக ஓடி கேட்ச் பிடிப்பதுபோல் சென்றார். இதனைப் பார்த்து வர்ணனையாளர்கள் சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
