'யோவ்... ஏன்யா உசுர எடுக்குறீங்க'?.. 'இது'னால என்னோட பவுலிங்கே போச்சு!.. இப்ப சந்தோசமா'?.. இது என்னடா பும்ராவுக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Feb 07, 2021 04:39 PM

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது.

jasprit bumrah says saliva ban is affecting bowlers india conditions

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. தற்போது 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.

jasprit bumrah says saliva ban is affecting bowlers india conditions

இதில் 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா சேப்பாக்கம் மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்யமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். கொரானா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவதன்மூலம் கொரானா பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை அறிவித்திருக்கின்றனர்.

இதன் மூலம், நான் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் தவித்து வருகிறேன். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். அவர் இந்திய சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவிலும் ரூட் அதிரடியாக விளையாடி வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jasprit bumrah says saliva ban is affecting bowlers india conditions | Sports News.