‘இதுதான்யா டெஸ்ட் மேட்ச்’.. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வச்ச வீரர்.. நொந்துபோன வங்கதேச ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 430 ரன்களும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களும் எடுத்தது.அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸீல் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. போட்டியின் கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரராக களமிறங்கி விளையாடிய கைல் மேயர்ஸ் (Kyle Mayers) ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை 5-வது முறையாக சேசிங் செய்து கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ் அணி கம்பீரமாக உள்ளது.
History created today 🔥
210 on debut for Mayers leading @windiescricket
to an extraordinary three-wicket victory over Bangladesh.#BANvWI | #WTC21 pic.twitter.com/wUBB3PMRsk
— ICC (@ICC) February 7, 2021
இதுதொடர்பாக, ஐசிசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கைல் மேயர்சின் 210 நாட் அவுட், அந்த அணி வங்கதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5-வது முறையாக 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இமாலய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி சேசிங் செய்தது, வங்கதேச ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உள்பட பலரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.