'ஒரு வாட்டி சொன்ன உனக்கு புரியாதா?.. 5 ரன்னை குறைச்சிடுவேன்!'.. கிழித்து தொங்கவிட்ட அம்பையர்!.. ஒடோடி சென்று மன்னிப்பு கேட்ட 'ஜோ ரூட்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணி வீரர்களுக்கு இன்று நடுவர் களத்திலேயே வார்னிங் கொடுத்த சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து இந்தியாவிற்கு எதிராக திணறி வருகிறது.
பிட்ச் மொத்தமாக பவுலிங் செய்ய சாதகமாக மாறிவிட்டது. இதனால், இங்கிலாந்து அணியால் நினைத்தபடி அதிரடியாக பேட்டிங் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இன்று நடுவர் களத்திலேயே வார்னிங் கொடுத்த சம்பவம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இன்று தொடக்கத்திலேயே அஸ்வின் அடுத்தடுத்து பர்னஸ் மற்றும் சிப்லி விக்கெட்டை எடுத்தார். அதன்பின் டேனியல் லாரன்ஸ் களமிறங்கினார்.
லாரன்ஸ்-ஜோ ரூட், ஜோடி போட்டு கொஞ்சம் வேகமாக ஆடி வந்தனர். இந்த நிலையில், அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால் வேகமாக ரன் ஓடி வந்தனர். இதில் லாரன்ஸ் அடிக்கடி நிலைதடுமாறி பிட்ச் மீது ஓடினார். இரண்டு முறை இவர் இதேபோல் பிட்ச் மீது ஓடினார்.
இதில் முதல் முறை பிட்ச் மீது ஓட வேண்டாம் என்று நடுவர் லாரன்ஸிடம் கூறினார். பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக உள்ளது. இதை சிதைக்க கூடாது என்று லாரன்சுக்கு நடுவர் வார்னிங் கொடுத்தார். ஆனால், அதன்பின் இரண்டாவது முறையும் லாரன்ஸ் இதேபோல் ஓடினார்.
இதையடுத்து இரண்டாவது முறை கோபம் அடைந்த நடுவர் நேரடியாக சென்று லாரன்சுக்கு அதிகாரபூர்வ வார்னிங் கொடுத்தார். மீண்டும் பிட்சில் இதேபோல் நீங்கள் ஓடினால், உங்களுக்கு 5 ரன்களை மைனஸ் செய்வேன். மொத்த ரன்னில் 5 ரன்களை குறைத்து விடுவேன் என்று வார்னிங் கொடுத்தார்.
இதையடுத்து ரூட் நேரடியாக நடுவரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காது என்று கூறினார். அதன்பின் அடுத்த ஓவரிலேயே லாரன்ஸ் அவுட் ஆனார். இஷாந்த் சர்மா ஓவரில் லாரன்ஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.