'மிட்நைட்ல கூப்பிட்டு சொன்னாரு...' '15 கோடியா-ன்னு எந்திரிச்சு உட்கார்ந்தேன்...' 'அதுக்கு எத்தனை டாலர்னே எனக்கு தெரியாது...' - உற்சாகத்தில் ஜேமிஸன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து அணியின் கைல் ஜேமிஸன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்தத்தில் தலைகால் புரியாமல் முழித்ததாக தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கைல் ஜேமிஸன் 6.8 அடி உயரமுள்ள கிரிக்கெட் போட்டியாளர் ஆவார். சுமார் 10-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் அவரின் பந்துவீச்சும், அதிரடியான ஆட்டமும் ஐபிஎல் லீக்கிற்குள் இழுத்து வந்துள்ளது.
நேற்று நள்ளிரவில் தான் 14-வது ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை அறிந்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்ததாகவும், உடனே ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டாலரில் எவ்வளவு என கணக்கு போட போனை தேடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பின்படி ரூ.15 கோடியும், அமெரிக்க டாலர் மதிப்பின்படி 20 லட்சம் டாலருக்கும் ஜேமிஸனுக்கு ஆர்சிபி அணி விலை கொடுத்துள்ளது. இதுகுறித்து கைல் ஜேமிஸன் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது தெரிவித்தாதாவது 'நான் ஆர்சிபி அணியால் விலைக்கு வாங்கப்பட்டது குறித்து ஷேன் பாண்ட் எனக்குத் தெரிவித்தார். இந்தச் செய்தி அறிந்து நள்ளிரவில் எனது மொபைல் போனை செக் செய்தேன்.
இந்திய மதிப்பில் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டதைப் பார்த்து உற்சாகத்தில் எழுந்து விட்டேன். ஆனால், நள்ளிரவில் எனக்கு ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டாலருக்கு எத்தனை டாலர்கள் என தெரியவில்லை. அதன்பின் ஷேன் பாண்டை அழைத்து அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
