போன வருசம் ‘சிஎஸ்கே’-ல விளையாடிய வீரரை வாங்கிய மும்பை.. யாருன்னு ‘கெஸ்’ பண்ணுங்க பாப்போம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னையில் 14-வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் வீரர்களை தங்களது அணிக்காக எடுக்க ஒவ்வொரு அணியும் மும்முறம் காட்டி வருகிறது. முன்னதாக கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி விடுத்தது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு சிஎஸ்கே எடுத்துள்ளது. மேலும் மற்றொரு ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடி கொடுத்து எடுத்துள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை ரூ.50 லட்சம் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பியூஸ் சாவ்லாவை ரூ.2.40 கோடி கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
