‘தோனியை பற்றி பேச ஆரம்பித்த புஜாரா’!.. சட்டென ‘மகள்’ சொன்ன ஒரு வார்த்தை.. ‘இது ஒன்னு போதுமே’.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து புஜாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை அணி ரூ.7 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது.
இதனை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரவை சென்னை அணி ரூ.50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கடைசியாக 2014ம் ஆண்டு பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடினார். இதனை அடுத்து கடந்த 7 வருடங்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்ததால், மற்ற அணி நிர்வாகிகளும் கைத்தட்டி வரவேற்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாட உள்ளது குறித்து தெரிவித்த புஜாரா, ‘ஐபிஎல் போட்டிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன். தோனி பாய் தலைமையில் மீண்டும் விளையாட இருக்கிறேன். நான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும்போது தோனிதான் கேப்டனாக இருந்தார். தற்போது மீண்டும் அவருடைய கேப்டன்ஷியில் விளையாட உள்ளதை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
A cute yellovely message from the legend of Che Pu to make your day super! @cheteshwar1 💛💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/eZZ4CXDevA
— Chennai Super Kings (@ChennaiIPL) February 19, 2021
புஜாரா தோனி குறித்து பேசும் போது, அவரது குழந்தை ‘உங்க தல சூப்பரு’ என கியூட்டாக கூறினார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
