சிஎஸ்கே விடுவித்த ‘அந்த’ வீரரை முதலில் ஒருத்தருமே ஏலத்தில் வாங்கல.. யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை முதலில் எந்த அணியும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் பல வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளன. அதில் சென்னை அணி ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது.
பல முக்கியமான போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் மீது அப்போது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முக்கியமாக கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் ஆடிய விதம் சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் கேதர் ஜாதவை, முதலில் எந்த அணியும் வாங்கவில்லை. இதனை அடுத்து கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிப்படை விலையில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த மினி ஐபிஎல் ஏலத்தில் கேதர் ஜாதவுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இது ஒரு வீரருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
