நேத்து ஏலத்துல இதை யாராவது கவனிச்சீங்களா?.. எல்லார் டி-ஷர்ட்டிலும் இருந்த ‘ஒரே’ வாசகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஐபிஎல் தொடரில் தோனி கூறி வைரலான வார்த்தை பதித்த டி-ஷர்டை, சிஎஸ்கே நிர்வாகிகள் ஏலத்தின் போது அணிந்திருந்தனர்.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நேற்று (18.02.2021) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை அணி ரூ.7 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரவை சென்னை அணி ரூ.50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகிகள் ஏலத்தின் போது அணிந்திருந்த டி-ஷர்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரிலும் தோனி ஓய்வை அறிவிப்பார் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
கடந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே ரசிகர்கள் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் போது, ‘இதுதான் சிஎஸ்கேவுக்காக ஆடும் கடைசி போட்டியா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த தோனி ‘Definitely Not’ ( நிச்சயமாக இல்லை) என பதிலளித்தார். உடனே இந்த வார்த்தை அப்போது இந்த சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சியில் ‘Definitely Not’ என்ற வாசகம் பதித்த டி-ஷர்ட் அணிந்து சிஎஸ்கே அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மற்ற செய்திகள்
